முதலில் எனது வலைபதிவை ஓர் , இருவர் படிப்பார்கள் என்று பார்தால்
கூகிள் புள்ளி விவரம், படித்தோர் பட்டியல் நூற்றை தாண்டியதாக காட்டுகிறது ......என்ன ஆச்சிரியம் !!! நிறைய நண்பர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் போலும் ...இதோ அவர்களூக்காக அடுத்தது வந்து விட்டது.
ஒரு இரண்டு வாரதிற்கு முன் ஒரு தானியங்கி மூவுருளி உந்துதில் சென்றேன் அட நம்ம ஆட்டோ தான் .... தமிழில் சொன்னால் எப்படி இருக்கிறது பாருங்கள் ;) . பின்புறம் ஒரு பெண்ணும் சில சிறுவர்களும் இருந்தனர் அதனால் நான் முன்னால் அமர்தேன் .சற்று தொலைவு போனதும் ஒரு வயதான பெரியவரும் முன் பக்கம் ஏறிகொண்டார் . அவர் அடுத்து வரும் மதுபான கடையில் நிறுத்துமாறு சொன்னார் , அதற்கு அந்த ஓட்டுனர் பாசமாக எதற்காக இப்படி வயதான காலத்தில் குடித்து உடம்பை கெடுத்து கொள்கிரர்கள் என்றும் , நன்கு தெரிந்தவர் போல் அக்கறையாக நிறைய பேசினார்.பின் அந்த பெரியவர் சென்ற உடன் நான் அந்த ஓட்டுனரிடம் அவர் உங்களின்
சொந்தமா என்று கேட்டேன் . அதற்கு அவர் சடாலென என் ஆட்டோவில் வரும் அனைவரும் என் சொந்தம் தான் என கூறினார் .இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை . பின் நம் சென்னையின் போக்குவரத்து நெரிசலின் பயனால் ஒரு பதினைந்து நிமிடம் பேசினோம் .திருவேர்காடில் பிடிபட்ட போலி மருத்துவரிலிரறிந்து இன்னும் பலவற்றை பேசினோம் .
எனினும் அவர் முதலில் சொன்னது எனக்கு மிகவும் பிடித்தது , பின் அவரையும் அந்த பதினைந்து நிமிட நட்பையும் தான். ...
மீண்டும் ஒரு புதிய பதிவுடன் பாப்போம் ;)