ஞாயிறு, 23 டிசம்பர், 2012

அமெரிக்க பயணமும் புது வருட கொண்டாட்டமும்

   
    கடந்த வருடம் இந்நேரம் நான் அமெரிக்க நாட்டில் இருந்தேன் அதன்  பிரதிபலிப்பு  தான் இந்த  பதிவு .
   
 ஒரு நாள் சற்றும்  எதிர்பாராத விதமாய் எனது  மேலாளர் வந்து  நீங்கள்
அமெரிக்க செல்ல வேண்டி  இருக்கலாம்  என்றார் . நானா அமெரிகவா ?
பொதுவாக மற்றவர்களை வானூர்தி நிலையதில்  வழி அனுப்புவது தான்  என் வேலை . ஒரு ஒரு முறை செல்லும்  போதும் அடுத்து நமக்கும் ஒரு வாய்ப்பு வரும்,  இல்லை அட   இதிற்காகவாவது  மேற்படிப்பு படிக்கச் வேண்டும் என்று
நினைப்பது உண்டு ;) ;) .

         நான் செல்வது  கிறிஸ்மஸ் மற்றும் புது வருட சமயம் என்பதால் எல்லோரும் அங்கு இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று அவர்களுக்கு அறிந்ததை கூறினார்கள்  . நானும்  ஆஹா இந்த வருடம் புது வருட கொண்டாட்டம் அங்கு என்று  ஆவலாக இருந்தேன் .எப்படியோ  அமெரிக்க  அதிகாரிடம் முச்சு விடாமல் பேசி  விசா வாங்கி அங்கே  போய்விட்டேன் .

  இறங்கிய உடனே எனது  தங்கும் விடுதிஇல்  கடன் அட்டை( கிரெடிட் கார்டு ) இல்லை என்று சொன்னதிற்கு  , என்னது கிரெடிட் கார்டு இல்லாமல் ஒரு மனிதனா ? இல்லை ஒரு வேளை வேற்று ஜந்துவா  என்ற  பார்த்து   அறை இல்லை  என்று கிட்டதட்ட சொல்லிவிட்டடர்கள் .எப்படியோ பேசி  சமாளித்து
நானும் பூமி வாசி தான் என்று புரிய வைத்து    ஒரு   தாங்கும் அறை வாங்கினேன் .

பயண களைப்பும் புது  இடதின் திகிலும் ஒரு   இரண்டு நாட்களை நகர்தின .
பின் மெதுவாக ஒரு விட தனிமை என்னை  வாட்டியது . கைபேசி இருந்தது ஆனால் பேச யாரும் இல்லை ,அலுவுலகதிலும் விடுமுறை என்பதால் அங்கும்  யாரும் இல்லை . நண்பர்களுடன் எப்பொழுதும் சுத்தும்  எனக்கு கொஞ்சம்  பித்து    பிடித்தாற்போல் தான் இருந்தது .  .

கடைசியில் வருட பிறப்பு அன்று தொடருந்து 48 மணி  நேரம் அறையை விட்டு  கூட வரவில்ல்லை  சூரியன் எப்போது  வந்து சென்றது என்று  கூட தெரியவில்லை ;) . என்னால்  மறக்க முடியாத புது வருடமாக தான் மாறி போனது .

ஆகமொத்தம் இப்படி தான் சென்றது  அந்த சிறப்பான கொண்டாட்டம் . இதோ இப்பொழுது அடுத்து வருட பிறப்பு வந்து விட்டது . இந்த வருடம் இந்தியாவில் எப்படி கொண்டாடுவது  என்று யோசிக்க ஆரமித்து விட்டேன் ஆனால் போன  வருடத்தை விட சிறப்பாக இருக்கும் என்று மட்டும் எனக்கு தெரியும் ;) ;)


        கொஞ்ச நாள் சென்ற உடன்  இரண்டு நண்பர்கள் கிடைத்து   நிறைய ஊர் சுற்றி  அதன் புகைப்படத்தை முகபுத்தகத்தில்   போட்டு   பல  அன்பர்களின் வாயிற்று எரிச்சலை தூண்டியது வேறு கதை ;) அதை நாம் வேறு  ஒரு நாள்  காணலாம் ;) ;);) .

புது வருட வாழ்த்துக்கள் ;) ;)












செவ்வாய், 30 அக்டோபர், 2012

பதினைந்து நிமிட நட்பு

முதலில் எனது வலைபதிவை  ஓர் , இருவர் படிப்பார்கள் என்று பார்தால் 
கூகிள்   புள்ளி விவரம், படித்தோர் பட்டியல் நூற்றை தாண்டியதாக காட்டுகிறது ......என்ன ஆச்சிரியம் !!!  நிறைய நண்பர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்  போலும்  ...இதோ  அவர்களூக்காக அடுத்தது வந்து விட்டது.

ஒரு இரண்டு  வாரதிற்கு முன் ஒரு தானியங்கி மூவுருளி உந்துதில் சென்றேன்  அட  நம்ம ஆட்டோ தான் .... தமிழில்   சொன்னால்  எப்படி இருக்கிறது பாருங்கள் ;) . பின்புறம் ஒரு பெண்ணும் சில சிறுவர்களும் இருந்தனர் அதனால் நான் முன்னால் அமர்தேன்  .சற்று தொலைவு போனதும் ஒரு வயதான பெரியவரும் முன் பக்கம்  ஏறிகொண்டார் . அவர்  அடுத்து வரும் மதுபான கடையில் நிறுத்துமாறு சொன்னார் , அதற்கு அந்த ஓட்டுனர் பாசமாக எதற்காக இப்படி வயதான காலத்தில் குடித்து உடம்பை கெடுத்து கொள்கிரர்கள்  என்றும் , நன்கு தெரிந்தவர் போல் அக்கறையாக நிறைய பேசினார்.

பின் அந்த பெரியவர் சென்ற உடன் நான் அந்த ஓட்டுனரிடம் அவர் உங்களின் 
சொந்தமா என்று கேட்டேன் . அதற்கு அவர் சடாலென என் ஆட்டோவில் வரும் அனைவரும் என் சொந்தம் தான் என கூறினார் .இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை . பின் நம் சென்னையின்  போக்குவரத்து நெரிசலின் பயனால் ஒரு பதினைந்து நிமிடம் பேசினோம் .திருவேர்காடில் பிடிபட்ட போலி மருத்துவரிலிரறிந்து இன்னும் பலவற்றை பேசினோம் .
எனினும் அவர் முதலில் சொன்னது எனக்கு மிகவும் பிடித்தது , பின் அவரையும் அந்த பதினைந்து நிமிட நட்பையும் தான். ...

  மீண்டும் ஒரு புதிய பதிவுடன் பாப்போம் ;)











சனி, 27 அக்டோபர், 2012

முதல் கிறுக்கல் ...;)

வலைபதிவு   ஒன்றை ஆரமிக்க வேண்டும் என்று பல நாள் தோன்றும் ஆனால் என்ன போடுவது ?  இப்படி   சிந்தித்துவிட்டு விட்டுவிடுவேன் ...
ஆனால் கடந்த வாரம்  ஒரு சில  நண்பர்களிடம் பேசும்போது  நாம் தமிழில் சிந்தித்தால்தான் நாம் நன்றாக யோசிக்க முடியும் என்றும் ,
நாம் ஆங்கிலதில்  பேச வேண்டும்  என்றால் தமிழில் யோசித்து பின் அதை  ஆங்கிலமாக மற்றுவோம்  என்று சொல்லி கொண்டு இருந்தேன் 
அதை தமிழில் சொல்ல முற்பட்டேன்  ஆனால் இதை சொல்லும்  போதே  எனது  பேச்சில்  நிறைய  ஆங்கில சொற்கள்  வந்தன 
எல்லாரும் சிரித்து விட்டோம் .அதை அப்படியே விட்டு விட்டோம் .
ஆனால் நான்  சிந்திக்க  தொடங்கினேன்  ஒருவேளை எனக்கும் தமிழ் மறந்து போகிறதோ ? ?  
அப்பொழுது தான்  ஒரு வலைபதிவு ஆரமித்து அதில் தமிழில்  எழுதலாமே என்று .......!!!!!கடைசியாக   பத்தாம்  வகுப்பில் !!
எழுதியது  !!!!!!!!!! தமிழ் தான் என் முச்சு , தமிழ் பற்று 
ஆங்கிலம் பயன் பயன்படுத்த  கூடாது என்றுலம் நான் சொல்ல போவது இல்லை  . நானும் உங்களில் ஒருவன் தான் .ஆங்கிலம் என்  பேச்சில் கலந்து விட்டது ..ஆனால் ஒரு புது முயற்சி காலபோக்கில் எனது தமிழ் வளரதா ? இல்லை மங்காமல் இருந்தால் சரி ;)..

சரி எழுதலாம் ஆனால் யார் படிப்பார்கள் ? அதன் என்  முகபுத்தகதில் நிறைய நண்பர்கள் இருகிரர்களே அதில்  ஒருவர் இருவர்  இதை  வேலை இல்லாமல் படிக்க மாட்டாரா  .... அப்பறோம் என்ன தயக்கம் அதன் ஆரமித்து விட்டேன் ...    ;);) 

அந்த ஒருவர்  நீங்கள்  தான்  ;)  மறக்காமல் வந்து போகவும் நிறைய சொல்ல இருக்கிறேன் ;) ;) .....
அடுத்த பதிவில் சந்திப்போம் ........