ஞாயிறு, 23 டிசம்பர், 2012

அமெரிக்க பயணமும் புது வருட கொண்டாட்டமும்

   
    கடந்த வருடம் இந்நேரம் நான் அமெரிக்க நாட்டில் இருந்தேன் அதன்  பிரதிபலிப்பு  தான் இந்த  பதிவு .
   
 ஒரு நாள் சற்றும்  எதிர்பாராத விதமாய் எனது  மேலாளர் வந்து  நீங்கள்
அமெரிக்க செல்ல வேண்டி  இருக்கலாம்  என்றார் . நானா அமெரிகவா ?
பொதுவாக மற்றவர்களை வானூர்தி நிலையதில்  வழி அனுப்புவது தான்  என் வேலை . ஒரு ஒரு முறை செல்லும்  போதும் அடுத்து நமக்கும் ஒரு வாய்ப்பு வரும்,  இல்லை அட   இதிற்காகவாவது  மேற்படிப்பு படிக்கச் வேண்டும் என்று
நினைப்பது உண்டு ;) ;) .

         நான் செல்வது  கிறிஸ்மஸ் மற்றும் புது வருட சமயம் என்பதால் எல்லோரும் அங்கு இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று அவர்களுக்கு அறிந்ததை கூறினார்கள்  . நானும்  ஆஹா இந்த வருடம் புது வருட கொண்டாட்டம் அங்கு என்று  ஆவலாக இருந்தேன் .எப்படியோ  அமெரிக்க  அதிகாரிடம் முச்சு விடாமல் பேசி  விசா வாங்கி அங்கே  போய்விட்டேன் .

  இறங்கிய உடனே எனது  தங்கும் விடுதிஇல்  கடன் அட்டை( கிரெடிட் கார்டு ) இல்லை என்று சொன்னதிற்கு  , என்னது கிரெடிட் கார்டு இல்லாமல் ஒரு மனிதனா ? இல்லை ஒரு வேளை வேற்று ஜந்துவா  என்ற  பார்த்து   அறை இல்லை  என்று கிட்டதட்ட சொல்லிவிட்டடர்கள் .எப்படியோ பேசி  சமாளித்து
நானும் பூமி வாசி தான் என்று புரிய வைத்து    ஒரு   தாங்கும் அறை வாங்கினேன் .

பயண களைப்பும் புது  இடதின் திகிலும் ஒரு   இரண்டு நாட்களை நகர்தின .
பின் மெதுவாக ஒரு விட தனிமை என்னை  வாட்டியது . கைபேசி இருந்தது ஆனால் பேச யாரும் இல்லை ,அலுவுலகதிலும் விடுமுறை என்பதால் அங்கும்  யாரும் இல்லை . நண்பர்களுடன் எப்பொழுதும் சுத்தும்  எனக்கு கொஞ்சம்  பித்து    பிடித்தாற்போல் தான் இருந்தது .  .

கடைசியில் வருட பிறப்பு அன்று தொடருந்து 48 மணி  நேரம் அறையை விட்டு  கூட வரவில்ல்லை  சூரியன் எப்போது  வந்து சென்றது என்று  கூட தெரியவில்லை ;) . என்னால்  மறக்க முடியாத புது வருடமாக தான் மாறி போனது .

ஆகமொத்தம் இப்படி தான் சென்றது  அந்த சிறப்பான கொண்டாட்டம் . இதோ இப்பொழுது அடுத்து வருட பிறப்பு வந்து விட்டது . இந்த வருடம் இந்தியாவில் எப்படி கொண்டாடுவது  என்று யோசிக்க ஆரமித்து விட்டேன் ஆனால் போன  வருடத்தை விட சிறப்பாக இருக்கும் என்று மட்டும் எனக்கு தெரியும் ;) ;)


        கொஞ்ச நாள் சென்ற உடன்  இரண்டு நண்பர்கள் கிடைத்து   நிறைய ஊர் சுற்றி  அதன் புகைப்படத்தை முகபுத்தகத்தில்   போட்டு   பல  அன்பர்களின் வாயிற்று எரிச்சலை தூண்டியது வேறு கதை ;) அதை நாம் வேறு  ஒரு நாள்  காணலாம் ;) ;);) .

புது வருட வாழ்த்துக்கள் ;) ;)












1 கருத்து:

  1. புது வருட வாழ்த்துக்கள். உன் வலி எனக்கு நன்றாக புரிகிறது. ஒய் ப்லட்? சேம் ப்லட்:)

    பதிலளிநீக்கு